விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியா இது.. 38 வயசுல முழுசா வேற மாதிரி இருக்காங்களே
கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை அபிராமி தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நாயகி ஆவார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குமரியாக ஒரு கலக்கு கலக்கியவர்.
2001 ஆம் ஆண்டு வெளிவந்த வானவில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி தொடர்ந்து மளமளவென படங்களில் நடித்து தள்ளினார்.
அபிராமி நடிப்பில் வெளிவந்த மிடில் கிளாஸ் மாதவன், சார்லிசாப்ளின், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் லக்கி ஹீரோயினாக மாறினார்.
2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி படம் தான் அபிராமி கடைசியாக தமிழில் நாயகியாக நடித்த படம். அதன் பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
இப்போது தமிழ் சினிமாவில் அவ்வப்போது கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். மேலும் விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த பூஜா குமாருக்கு பின்னணி குரல் கொடுத்தது கூட அபிராமி தானாம்.
தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய அபிராமி 38 வயது ஆகியும் இன்னும் கட்டுக்குலையாமல் இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அபிராமியின் தற்போதைய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துக்களேதுமில்லை