கொரோனாவினால் இரண்டு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறை ஊழியர்கள் இரண்டு இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் 10 முதல் 15 இலட்சம் வரை அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக திரைச்சேறி பத்திரம் வெளியிட்டு 300 பில்லியன் ரூபாய் பணம் ஒதுக்க வேண்டும். அவ்வாறான நிலைமை எடுக்கவில்லை என்றால் தனியார் துறை ஊழைியர்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகுவதனை ஒரு போது தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் பணியாற்றிய கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மற்றும் மத்திய கலாச்சார நிதியம் ஆகியவற்றின் ஊழியர்கள் இந்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.