ஒன்ராறியோ மானிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்கள் மேற்க்கெடுப்பு ஒன்ராறியோ அரசு! ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தாவும் முயற்சிகள்.
ஒன்ராறியோ மானிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்களை ஒன்ராறியோ அரசு மேற்கொண்டு வருகின்றது. தொழிலகங்கள் மீள இயங்க ஆரம்பிக்கும்போது, கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தமது ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான வழிகாட்டல் விதிமுறைகளைத் தொழிலக முதலாளிகள் அறிந்திருப்பதுடன் அவற்றைக்
இற்றைவரைக்கும் சில்லறை விற்பனை வணிகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கட்டுமானப் பணியிடங்கள் போன்றவற்றுக்கு வேண்டிய 60இற்கும் மேற்பட்ட கொவிட்-19 தொற்றுக்கால வழிகாட்டல்முறைகள், அரசினாலும் ஒன்ராறியோ சுகாதார பாதுகாப்பு அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோவின் ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும்பொருட்டு, தொழிலக முதலாளிகளுக்கு அவைதொடர்பான ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கவும், பணியகங்களில் பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யவும், 58 பணியிட ஆய்வாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
தொழிலக முதலாளிகளுக்கு வேண்டிய பணியிடப் பாதுகாப்பு அறிவித்தல் பிரதிகள் பின்வரும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் : Ontario.ca/coronavirus
கருத்துக்களேதுமில்லை