வவுனியாவில் மரக்கறி,பழவகை வியாபாரம் தொடர்பாக கமநல அபிவிருத்தி விடுத்துள்ள அறிவிப்பு!

வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில்  பொதுமக்கள்  மரக்கறிகளை வீடுகளில் இருந்தபடியே  கொள்வனவு செய்யக்கூடிய வகையில்  உள்ளூர்களில் வீடுகளுக்கு நேரடியாக  மரக்கறி வியாபாரம் மேற்கொள்ளுவதற்காக வியாபாரிகள் ஒழுங்குபடுத்தபட்டுள்ளனர். அவர்களது விபரங்கள்

அதேபோன்று விவசாயிகளிடம் இருந்து  பிற மாவட்டங்களுக்கு   மரக்கறி பழவகைகளை கொள்வனவு செய்து கொண்டு செல்வதற்கானவசதிகளும்ஏற்படுத்தபட்டுள்ளன.பிற  மாவட்டங்களுக்கு பொருட்களை சந்தைபடுத்த விரும்பும் விவசாயிகளின் நலன்கருதி   பொருட்கள் சந்தைபடுத்தும் இடங்கள் மற்றும்  வெளிமாவட்டங்களுக்கு  அனுமதிக்கபட்ட  வாகனங்கள் தொடர்பான  விபரங்கள் இணைக்கபட்டுள்ளன.

 அதேபோன்று  வெளிமாவட்டங்களுக்கு  பப்பாசி பழங்களை கொண்டு செல்வதற்கும்  வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளன.

ரெட்லேடி  பப்பாசி பழத்த்திற்கான ஆகக்குறைந்த கொள்வனவு விலை  கிலோ ரூபாய் 20 /=  ஆகும்.  கிலோ ரூபாய் 20 /=க்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்யும் வியாபாரிகள் தொடர்பான முறைபாடுகள் கிடைக்குமிடத்து   ஊரங்கு நேர போக்குவரத்து அனுமதி செல்லுபடியற்றதாக்கப்படும்.

மேலும் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கூடிய விலைகளில் விற்பனை செய்வது தொடர்பாக கிடைக்கபெறும்   முறைப்பாடுகளின் அடிப்படையில்  ஊரடங்கு நேர வியாபார அனுமதி செல்லுபடியற்றதாக்கப்படும்.

முறைபாடுகளுக்க்கான தொலைபேசி இலக்கம்

024-2225511

தகவல் – கமநல அபிவிருத்தி  திணைக்களம் – வவுனியா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.