சுறா படத்தோடு என் வாழ்கையும் முடிந்தது.. கண்ணீர் விட்டு நடந்ததை கூறும் இயக்குனர்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு 50வது படத்தை தோல்வி படமாக கொடுத்த பெருமை இயக்குனர் எஸ்பி ராஜ்குமார் அவர்களையே சேரும். எல்லோருக்குமே சினிமாவில் 25, 50, 75, 100 ஆகிய படங்கள் மிகவும் ஸ்பெஷலாக அமைய வேண்டும் என பலமுறை யோசித்து தான் கதையை தேர்ந்து எடுப்பார்கள்.
ஆனால் விஜய்க்கு அப்படியே நேர் எதிர். சினிமாவில் மிக முக்கியமாக கருதப்படும் 50வது படமான சுறா படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இது குறித்து முதல்முறையாக இயக்குநர் எஸ்பி ராஜ்குமார் மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது,
முதலில் சுறா படத்தின் கதையில் விஜய்யின் தலையீடு அதிகமாக இருந்ததாக செய்திகள் வெளியாகியது. ஆனால் அது உண்மை இல்லை, படத்தில் முழு சுதந்திரம் எனக்குக் கொடுக்கப்பட்டது. மேலும் சுறா படத்தின் முதல் காட்சி வெளியான பிறகு மலேசியாவிலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை தான் வெளியில் வந்தது.
ஆனால் திடீரென படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை பலர் பரப்ப ஆரம்பித்து விட்டனர். என்ன நடக்கிறது என்று புரிவதற்குள்ளேயே படம் பிளாப் என முத்திரை குத்தி விட்டார்கள் என கதறுகிறார். அதுமட்டுமல்லாமல், சுறா படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் தன்னை மிகவும் பாராட்டியதாகவும், தல அஜித் இடம் தன்னை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஒருவேளை சுறா படம் பெரிய ஹிட் அடித்திருந்தால் இன்று நானும் ஸ்டார் இயக்குனராக வலம் வந்து இருப்பேன் எனவும், அந்த படத்தின் தோல்விக்கு பிறகு பெரிய நடிகர்களுக்கு கதை சொல்வதை விட்டு விட்டேன் எனவும் கூறுகிறார் எஸ்பி ராஜ்குமார்.
மேலும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தாலும் அரசியல் சூழ்ச்சிகளால் தான் சுறா படம் தோல்வியை தழுவியது என ஒரு பேச்சு கோடம்பாக்க வட்டாரத்தில் பல நாட்களாகவே இருக்கிறதாம். மேலும் சுறா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை