சிம்புவுடன் நெருக்கமாக கிசுகிசுக்கபட்ட முன்னணி நடிகைகள்.. அறுப்புக் காலத்தில் எலிக்கு அஞ்சு பொண்டாடியாம்

நடிகர் சிம்புவால் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் அல்லது தமிழ் சினிமாவில் சிம்புவுடன் நல்ல உறவில் (அதாங்க நட்பு) இருந்த நடிகைகள் என்று இரண்டு கோணத்தில் பார்த்தால், சில முன்னணி நடிகைகள் லிஸ்ட்டில் உள்ளனர்.

சார்மி:

அதில் முதலிடத்தில் சிம்பு அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நடித்த சார்மியை காதலித்து பின்பு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர் என்ற செய்திகள் மேலும் இவர்கள் காதலித்து அதை சிம்பு ஒரு பேட்டியில் கூட ஒத்துக்கொண்டார் என்றும் கூட செய்திகள் வந்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

சார்மிக்கு பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை லிட்டில் சூப்பர் ஸ்டார் காதலித்து எப்படியாவது ரஜினிகாந்தின் மருமகன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் அதுவும் நிலைக்கவில்லை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் தட்டி தூக்கினார் என்றே கூறலாம்.

சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதில் சிம்பு ஐஸ்வர்யாவை திட்டி இருப்பார் (கேட்டால் நான் அவனில்லை என்று சொல்வார்கள்).

நயன்தாரா:

அதற்குப்பின் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவை வல்லவன் படத்தில் வளைத்துப் போட்டார் சிம்பு. அதில் நெருக்கமான காட்சிகள் மூலம் நயன்தாரா சிம்புவுடன் காதல் உச்சம் பெற்றது. ஆனால் அந்த காதலும் நிலைக்கவில்லை இவர்கள் லிப் லாக் அடித்த புகைப்படம் லீக்காகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனால் தனது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று சிம்புவை நயன்தாரா கழட்டி விட்டதாக இன்றளவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

வரலட்சுமி:

இப்படி காதல் தோல்வியில் இருந்த சிம்பு ‘போடா போடி’யின் படப்பிடிப்பின் போது வரலட்சுமி சரத்குமாருடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் தனது காதல் வலையில் வரலட்சுமி சரத்குமார் இருந்தார் என்றும் செய்திகள் பரவியது. ஆனால் அந்த காதலும் முடிவுக்கு வந்தது.

ஹன்சிகா மோத்வானி:

இப்படி பல காதலை பார்த்த மன்மதன் கடைசியாக ஹன்சிகா மோத்வானியை தன் வலையில் விழ வைத்தார், வாலு படத்தின் படப்பிடிப்பின் போது இவரும் சிக்கினார் என்றெல்லாம் செய்திகள் வந்தது. தற்போது இவர் தான் சிம்புவுடன் கொஞ்சம் நெருக்கத்தில் இருப்பதாகவும் ஆனால் அது நட்பு மட்டுமே என்றும் கூறுகின்றனர்.

சிம்புவுடன் ஏற்கனவே காதல் வலையில் விழுந்த வரலட்சுமி சரத்குமார் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம். ஏனென்றால் வரலட்சுமிக்கும் விஷாலுக்கும் நடந்த சண்டைதான் காரணம். ஏற்கனவே சிம்புவுக்கும் விஷாலுக்கும் ஆகாது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல் சிம்பு வரலக்ஷ்மி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வைரலானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.