இரண்டு சூர்யா பட வாய்ப்பையும் தட்டி தூக்கிய வாணி போஜன்.. போட்டோஷூட்லாம் இப்பதான் வேல செய்யுது
ப்ரியா பவானி சங்கருக்கு பிறகு சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றி கொண்டிருப்பவர் வாணி போஜன். சமீபத்தில் இவர் நடித்த ஓ மை கடவுளே படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் தற்போது சூர்யா அடுத்ததாக தயாரிக்க இருக்கும் இரண்டு படங்களிலும் வாணி போஜன் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இரண்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருந்ததால் வாணி போஜனை தேர்வு செய்துள்ளனர்.
மேலும் வைபவ் ஜோடியாக லாக்கப் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் வாணி போஜன், முருகதாஸ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவரும் தனித்தனியே தயாரிக்கும் வெப் தொடர்களிலும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
அதுமட்டுமில்லாமல் ஆதவ் கண்ணதாசனுடன் ஒரு பேய் படமும், பிரபல நடிகர் விதார்த் தயாரித்து நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கொட்டும் வாய்ப்புகளால் விரைவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
திருமணத்திற்கு பிறகும் ஒரு நாயகிக்கு வாய்ப்புகள் கொட்டுவது இதுவே முதல்முறை என்கிறது சினிமா வட்டாரம்.
கருத்துக்களேதுமில்லை