எகிப்தில் பொலிஸ் சோதனையின்போது 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
எகிப்து நாட்டின் வடக்கு சினாயில், பொலிஸ் சோதனையின்போது குறைந்தது 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக எகிப்தின் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) என கூறிக்கொள்ளும் பயங்கரவாத அமைப்பு நடத்திய, பயங்கர குண்டுத்தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பயங்கரவாதிகள் பிர் அல்-ஆபேட் நகரில் உள்ள ஒரு உறைவிடத்தை உள்ளூர் தலைமையகமாகப் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி, உளவுத்துறை மேற்கொண்ட விஷேட சோதனையின் போதே இவர்கள் கொல்லப்பட்டதாக அமைச்சின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இதன்போது, 13 தானியங்கி ஆயுதங்கள், இரண்டு தற்கொலை குண்டு அங்கிகள் மற்றும் மூன்று வெடிபொருள் சாதனங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
எகிப்து நாட்டில் போகோஹராம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை