அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க! பிரதமருடனான சந்திப்பில் வலியுறுத்தினார் சுமன்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகுறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
குறிப்பாக நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி பொதுமன்னிப்பின் பெயரில் அவர்களை விடுதலை செய்யவேண்டும். மிக நிண்டகாலமாக அவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே அவர்களுக்கான குறுகிய கால தண்டனை வழங்கி அவர்களை விடுதலை செய்யவேண்டும். கடந்தகாலங்களில் அவ்வாறு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரிலும் விடுவிக்கப்பட்டனர்.
எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கூடிய கவனம் செலுத்தவேண்டுமென சுமந்திரன் எடுத்துக்கூறியுள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்த பிரதமர்
நீண்ட காலமா தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதனை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இவர்களை விடுதலை செய்யமுடியுமா என்பது குறித்து சட்டமுறைகள் என்ன என்பது கவனத்தில் கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். அதேபோல் பொது மன்னிப்பில் விடுவதென்றால் அது ஜனாதிபதியினால் மாத்திரமே முடியும். எனவே அவருடன் இது குறித்து கலந்துரையாடி அவரது நிலைப்பாடு என்னவென்று அதனை உங்களுக்கு அறியத்தருகிறேன் – என்றுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை