சென்னையில் மதுக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு!
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மதுக்கடைகளை திறக்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதனை கடை பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளை திறக்கவும் அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து கொரோனா பரவல் அதிகரிக்கும் இச்சமயத்தில் மதுக்கடைகளை திறப்பதா என பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது எனவும் அங்கு மதுக்கடைகள் திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை