தன் கணவருடன் ஓவராக ஒட்டி உரசிய சாய் பல்லவி.. விட்டா கூட்டிட்டு போய்டுவா போல என சமந்தா செய்த வேலை

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். சில வருடங்களுக்கு முன்புதான் நாக சைதன்யா பிரபல நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நாக சைதன்யாவின் படங்களுக்கு எப்போதுமே தெலுங்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கும். அந்த வகையில் நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி ஆகிய இருவரின் நடிப்பில் லவ் ஸ்டோரி என்ற படம் தயாராகி வருகிறது.

கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்லும் காதல் கதையாக உருவாகியிருக்கும் லவ் ஸ்டோரி படத்தில் நாக சைதன்யாவுக்கும் சாய்பல்லவிக்கும் மிக நெருக்கமான காட்சிகள் அதிகமாக இருப்பதாக சமந்தாவுக்கு தகவல்கள் சென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டு புரோமோ வீடியோவில் நாக சைதன்யாவுக்கு சாய்பல்லவி இறுக்கி அணைத்து கன்னத்தில் அழுத்தி முத்தமிடும் காட்சி செம வைரல் ஆனது. அதுமட்டுமல்லாமல் படம் முழுவதும் இருவருக்குமான ரொமான்ஸ் காட்சியில் எக்கச்சக்கமாக இருக்கிறது.

இதனை அறிந்த சமந்தா உடனடியாக அந்த படத்தை எடுத்த வரை பார்த்தே ஆக வேண்டும் என அடம் பிடித்து பார்த்து விட்டதாக செய்திகள் கிடைத்துள்ளது. மேலும் சாய்பல்லவி மீது பொறாமை பட்ட சமந்தா, சாய்பல்லவிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள காட்சிகளை கட் செய்யச் சொல்லி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இருந்தாலும் படப்பிடிப்பு இன்னும் முழுவதும் முடிவடையாத நிலையில் எப்படி இது சாத்தியமாகும் எனவும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.