சாப்பிட்ட பிறகு வாக்கிங் போறது நல்லதா? அப்படி போனால் எடை குறையுமா?
உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக நீங்கள் உங்கள் தினசரி உணவின் அளவில் கலோரிகளை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டும். பின்பு, சாப்பிட்ட பின் சாப்பிட கலோரிகள் குறையும் அளவுக்கு உடற்பயிற்சியோ அல்லது மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டும். இது தவிர இன்னும் சில விஷயங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக சாப்பிட்டு முடித்த பின், நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பது உடல் எடையை சீராக குறைக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுபற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
உணவுக்கட்டுப்பாடு
உடல் எடை குறைப்பு என்று வந்துவிட்டால் உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி இரண்டுமே இரண்டு கண்கள் போன்றது. இவை இரண்டுமே ஒருசேர செய்யும் பொழுது உடல் எடையை வேகமாக குறையும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். உங்களது உடல் எடையை குறைக்க வேண்டுமென்ற நோக்கங்கள் உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக நீங்கள் உங்கள் தினசரி உணவின் அளவில் கலோரிகளை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டும்.
கலோரி எரிப்பு
சாப்பிட்ட பின் சாப்பிட்ட கலோரிகள் குறையும் அளவுக்கு உடற்பயிற்சியோ அல்லது மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டும். இது தவிர இன்னும் சில விஷயங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. அதில் முக்கியமாக நடைபயிற்சி உங்கள் உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் கலோரியை நடைப்பயிற்சி செய்தே குறைக்க வேண்டும் என்றால் நாம் பெரிதளவில் நடைபயிற்சி செய்ய வேண்டிய இருக்கும்.
நீரிழிவு
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியில் தினமும் உணவுக்கு பின்பு மூன்று வேளையும் ஒரு 15 நிமிடம் ட்ரெட்மில் உள்ளவர்கள் அதில் நடைப்பயிற்சி சென்றால் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சீராக இருக்கிறது என்று கணித்துள்ளனர். இது சர்க்கரை வியாதி இரண்டாம் நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். வீட்டில் இல்லாதவர்கள் ஒரு 15 நிமிடம் சிறிய நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். உடற்பயிற்சி செய்ய வீட்டுக்குள்ளேயே சுற்றியும் வரலாம் என்றும் கூறுகின்றனர்.
ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்துதல்
பொதுவாகவே உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே ஆகும். சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் அதை நாம் கட்டுக்குள் வைத்திருந்தால் உடல் எடை அதிகரிப்பதை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளலாம். மேலும் சாப்பிட்டு முடித்த உடன் சிறிது தூரம் நாம் நடந்து வந்தால் நாம் சாப்பிட்ட உணவானது மிகவும் சுலபமாக சீரழித்துவிடும். இன்று இருக்கும் வாழ்க்கை முறை பலருக்கும் உடலுழைப்பு அற்ற வாழ்க்கை முறையாகவே ஆகி உள்ளது.
குட்டி வாக்கிங்
மூன்று வேளை நாம் சாப்பிடும் உணவானது நமக்கு பெருமளவு தேவைப்படுவதில்லை. இருந்தாலும் மூன்று வேளையும் சாப்பிட்டு பழக்கப்பட்டு விட்டோம் என்பதால் அவை குறைத்தாலும் சில பிரச்சனைகள் நமக்கு ஆகிறது. எனவே சாப்பிட்ட உணவை, அதன் கலோரியை கரைப்பதை தவிர நமக்கு வேறு வழி தற்போதைக்கு கிடையாது. சாப்பிட்டு முடித்த உடன் சிறிது நேரம், 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரையாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது உணவை எளிதில் ஜீரணமாக்கும். அதுமட்டுமில்லாமல் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து உடல் எடை குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
எவ்வளவு நேரம்?
சாப்பிட்டு முடித்தவுடன் குறைந்தபட்சம் 15 நிமிடமாவது நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு குறைவாக மேற்கொள்வது பெரிதளவில் உபயோகமாக இருக்காது. குறைந்தபட்சம் 15 நிமிடம் ஆவது இருக்க வேண்டும். உங்களுக்கு அதைவிட அதிக நேரம் இருந்தால் இன்னும் சற்று நேரம் நடைப் பயிற்சியின் நேரத்தை கூட்டிக் கொள்ளலாம். ஆனால் முக்கியமான விதி என்னவென்றால் நீங்கள் உணவு உண்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த நடைபயிற்சியை ஆரம்பம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இது நல்ல பிரயோஜனமாக அமையும் என்று கூறுகின்றார்கள். ஒருவேளை நீங்கள் உணவு சாப்பிட்டு உடனேயே உங்கள் நடைபயிற்சி ஆரம்பம் செய்தால், சிறிது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே தான் உணவு சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்து உங்கள் நடை பயிற்சி ஆரம்பம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். முடிந்தவரை சரியான அளவில் நடக்க வேண்டும். மிக வேகமாக நடப்பது ஜீரணக்கோளாறு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
மூன்றுவேளை உணவுக்குப் பின்னும்
இதுபோல் மூன்று வேலை சாப்பாட்டிற்கு பின்பும் உங்களுக்கு நடைப்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றாலும் ஏதேனும் இரண்டு வேளைகள் நீங்கள் இதை செய்தால் மிகவும் நன்மையாக அமையும். குறிப்பாக உடல் எடை குறைக்க வேண்டும் என்று கருதுபவர்கள் உங்கள் உணவு எளிதில் சீரணமாகவும் அதற்கு மட்டுமல்லாமல் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் இதுபோன்ற நடைபயிற்சி மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். காலை எழுந்து செய்யும் உடற்பயிற்சியையும் மிகவும் முக்கியமானதாகும். சாப்பிட்டுவிட்டு தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்தாலே உடல் எடை குறைந்துவிடும் என்று அர்த்தமல்ல. உடல் எடையை குறைப்பதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். மற்ற உடற்பயிற்சிகள் அல்லது நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு கட்டுப்பாடுகளை நிச்சயம் தொடர வேண்டும். அப்படி உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சாப்பிட்டுவிட்டு நடைபயிற்சி, என்று நீங்கள் இருந்தீர்கள் என்றால் உங்கள் உடல் எடை மிகவும் வேகமாக குறையும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
கருத்துக்களேதுமில்லை