வீட்டில் இருக்கும் புளியை கொண்டு இவ்வளவு பிரச்சனையை சரி செய்ய முடியுமா?

உண்ணும் உணவு செரிமானம் ஆவதில் புளிக்கு தனி இடம் உண்டு. அதே நேரம் நோய்க்குள்ளாகும் போது புளியை தள்ளி வைப்பது தான் நல்லது. பொதுவாக உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் புளியை பொறுத்தவரை அதை ஆறவிட்டு ஆறுமாதங்கள் கழித்து பயன்படுத்தவேண்டும். இல்லையெனில் அவை உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என்று சொல்வார்கள் முன்னோர்கள். புளியின் இலை, பூ, காய், புளியம்பழத்தில் ஓடு, கொட்டை, மரத்தின் பட்டை அனைத்துமே மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. வீட்டிலிருக்கும் புளியை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் தெரிந்து கொள்வோம்.

​மலம் இறுகி கழிதல்

samayam tamil

இது மலச்சிக்கலுக்கு முந்தைய நிலை என்று சொல்லலாம். தொடர்ந்து மலம் இறுகி கழியும் போது ஆசனவாயில் வலி உணர்வு உண்டாகும். மலம் கழித்த பிறகு ஆசனவாயில் எரிச்சலும் மிகுந்திருக்கும். இதனால் மலம் கழிக்கவே பயப்படுவார்கள்.

 

பழைய புளி – 10 கிராம் அளவு எடுத்து கால் டம்ளர் வெந்நீரில் தண்ணீரில் ஊறவிடவும். அதில் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் சூரத்து நிலாவரை பொடி ( தேவைப்பட்டால்) ஒரு டீஸ்பூன், தனியா ஒரு டீஸ்பூன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். புளியின் சாறு முழுவதுமாக நீரில் இறங்கியிருக்கும். இதை இலேசாக கைகளில் கசக்கி வடிகட்டி இனிப்பு தேவையெனில் தேன் சேர்த்து குடிக்கவும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை குடித்தால் மலம் இளகி போகும். மீண்டும் மலம் இறுகி போகும் போது மறுபடியும் இதே முறையை பின்பற்றினால் போதும்.

ரத்தக்கட்டு

samayam tamil

உடலில் காயம் ஏற்படும் போது சில நேரங்களில் ரத்தக்கட்டு உண்டாகும். இவர்கள் புளியை நீரில் ஊறவைத்து கரைத்து கல் உப்பு, மஞ்சள் தூள், சுக்குத்தூள் கலந்து கட்டு இருக்கும் இடத்தில் பற்று போட்டால் ரத்தகட்டு நீங்கும். உடலின் உள்ளுறுப்பில் ஏற்பட்டிருக்கும் ஊமை காயமும் மறையும்.

உடலில் சுளுக்கு உண்டாகும் போது அந்த இடத்தை அசைக்கவே முடியாது. கை, கால், தோள்பட்டை, கழுத்து பகுதி என்று எங்கு சுளுக்கு விழுந்தாலும் அந்த இடத்திலும் இதே போன்று பற்று போட்டு வந்தால் இரண்டு அல்லது மூன்றாவது பற்றிலேயே சுளுக்கு நீங்கிவிடும். பற்று போடும் போது சூடு பொறுக்குமளவு போட வேண்டும். இல்லையெனில் சருமம் சூட்டினால் பாதிக்கப்படும்.

​வாயில் உண்டாகும் பிரச்சனை

samayam tamil

வாய் வேக்காளம் ( காய்ச்சலுக்கு பிறகு மாத்திரைகளின் வீரியம் காரணமாக வாய்க்குள் சூடு போன்று சிறு சிறு கட்டிகள் இருந்து ஒருவித அசெளகரியத்தை உண்டாக்கும்) பல் ஈறுகள், வாய் வறட்சி, உமிழ்நீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது புளியை அளவாக சரியாக பயன்படுத்தினால் பலன் பெறலாம். டான்சில் என்னும் தொண்டை சதை ஆரம்பத்தில் கண்டறிந்தாலும் அதையும் புளியை கொண்டு குணப்படுத்திவிட முடியும்.

நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அதில் கல் உப்பை கலந்து வாய் கொப்புளித்து வந்தால் பல் வலி குறையும். வாய் வேக்காளம் குணமாகும். புளியையும், உப்பையும் கலந்து அம்மியில் நசுக்கி அதை குழைத்து விரலில் தடவி உள்நாக்கில் தடவி கொள்ள வேண்டும். எச்சில் வந்தால் வெளியே உமிழ கூடாது. அவை கரைந்து தொண்டையில் முழுவதுமாய் கரையும் வரை வேறு எதையும் சாப்பிட கூடாது. இப்படி செய்தால் டான்சில் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் முடியும்.

​மூட்டு வீக்கம்

samayam tamil

பலரும் சுளுக்கு, ரத்தகட்டு போன்று வீக்கத்துக்கும் புளியை பயன்படுத்தி அவை குணப்படுத்தவில்லை என்று புலம்புவதுண்டு. நாம் பயன்படுத்தும் பொருள்கள் எண்ணற்ற மருத்துவகுணங்களை கொண்டிருந்தாலும் உரிய முறையில் பயன்படுத்தினால் தான் பலனையும் முழுமையாக பெற முடியும்.

புளி இலை (கிடைத்தால் நல்லது) உடன் புளியை ஊறவைத்து சம பங்கு கடுகு சேர்த்து, சிறிதளவு மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். அதிக இறுக்கமாகவும் வேண்டாம். அதிக நீர்த்தும் போகவும் வேண்டாம். பிறகு இதை மூட்டு வீக்கம் இருக்கும் பகுதியில் பற்று போட வேண்டும். ஒரு நாளில் பலன் கிடைத்துவிடாது. தொடர்ந்து ஒரு மாதம் வரை பயன்படுத்தினால் மூட்டு வீக்கம் வற்றிவிடும்.

சேற்றுப்புண்

samayam tamil

சேற்றுப்புண்ணுக்கு செய்யாத வைத்தியம் இல்லை. ஆனாலும் அவ்வபோது இந்த பூஞ்சை தொற்று கால் விரல்களின் இடுக்குகளில் வந்து அவஸ்தையை உண்டு செய்கிறது. இதற்கு கை வைத்தியம் கைகொடுக்குமா என்று கேட்கலாம்.

 

இவர்கள் புளிய மரத்தின் இலை, மருதாணி இலை, மஞ்சள், நான்கைந்து கல் உப்பு சேர்த்து அரைத்து சேற்றுப்புண் மீது தடவி வந்தால் ஒரே வாரத்தி எப்படி பட்ட பூஞ்சை தொற்றாக இருந்தாலும் மறைந்துவிடும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.