பாடசாலையை விட அதிக நாட்கள் வைத்திய சாலையில் இருந்து சாதித்த மாணவனின் கோரிக்கையை தீர்த்து வைத்தார் சிறீதரன்
பாடசாலையை விட அதிக நாட்கள் வைத்தியசாலையிலிருந்து சாதித்த மாணவன் பவித்திரன் அவர்களின் கோரிக்கையான நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று பெற்றுக் கொடுத்துள்ளார்.
அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவனான பவித்திரன் ஒரு சிறுநீரகம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் ஏழு வருடங்களாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் தன்னுடைய சிறுநீரக பிரச்சினையை எதிர் கொள்வதற்கான பிரதான காரணம் குடிநீர் தான் எனவும் நீரை சுத்திகரிப்பு செய்யும் இயந்திரத்தினை பயன்படுத்தி சுத்திகரிப்பு செய்து நீர் அருந்தினால் மற்ற சிறுநீரகத்தையும் பாதுகாக்கலாம் எனவும் கூறியிருந்ததார் .
இவற்றை கருத்தில் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் நோர்வே நாட்டில் வசிக்கும் ஜக்சன் றோய் என்பவரின் நிதி உதவியுடன் பவித்திரனுக்கு இன்றைய தினம் ஜக்சன் றோயின் மனைவியாலும் சகோதரனாலும் பச்சிலைப்பபள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை