ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் – ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தவராசாவினால் நேற்று(புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள அவரை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 06 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் அவர் சார்பில் இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை