பிரச்சனையால் பாதியில் கைவிடப்பட்ட தமிழ் படங்கள்.. இதுக்குதான் ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்
சினிமாவை பொறுத்தவரை மிக பிரமாண்டமாக ஆரம்பித்து இறுதியில் கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட் நிறைய உள்ளது. விஜய், அஜித், ரஜினி, கமல் போன்றோருக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்படி பெரிய அளவில் பேசப்பட்டு கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட் பற்றி பார்ப்போம்.
1998 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் ரோபோ. பின்னர் இந்த படம் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் என்ற பெயரில் உருவாகி செம ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
1997 ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கி நடிக்க இருந்த மருதநாயகம் படம் பெரிய அளவில் பேசப்பட்டு பின்னர் பட்ஜெட் பத்தாமல் கைவிடப்பட்டது. இப்போது கூட அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
2004 ஆம் ஆண்டு அஜித், ஜோதிகா நடிப்பில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் நியூ. பின்னர் எஸ் ஜே சூர்யா சிம்ரன் நடிப்பில் வெளியாகி செம ஹிட்.
2004 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த திரைப்படம் ஜக்குபாய். பாட்ஷா படத்தின் திரைக்கதையை போல இருந்ததால் கைவிடப்பட்டது. பின்னர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி மண்ணைக் கவ்வியது.
2004 ஆம் ஆண்டு அஜித், அசின் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் மிரட்டல். இதுவும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் கைவிடப்பட்டது. பின்னர் சூர்யா, அசின் நடிப்பில் கஜினி என்ற பெயரில் உருவாகி மெகா ஹிட்.
2007 ஆம் ஆண்டு காமெடி நடிகர் செந்தில் மற்றும் மீனா நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக இருந்த திரைப்படம் ஆதிவாசியும் அதிசய பேசியும். காரணங்கள் தெரிவிக்கப்படாமலேயே இந்த படம் கைவிடப்பட்டது.
2011 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான திரைப்படம் இது மாலை நேரத்து மயக்கம். சிறிது நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு கைவிடப்பட்டது. பின்னர் இந்த படம்தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் இரண்டாம் உலகம் ஆக வெளிவந்ததாக செய்திகள் கிடைத்துள்ளது.
2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் யோகன் அத்தியாயம் ஒன்று. போட்டோ ஷூட் நடைபெற்ற நிலையில் கதையில் இருந்த சில குழப்பங்கள் ஏற்பட்டதால் படம் கைவிடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஆர்யா தம்பி சத்யா மற்றும் குத்து ரம்யா நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் காதல் டூ கல்யாணம். அறிவிப்பு வந்த வேகத்திலேயே படப்பிடிப்புகள் இழுத்து மூடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் பேண்டஸி படமாக உருவாகி இருந்த திரைப்படம் கரிகாலன். இந்த படத்தின் போட்டோ ஷுட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காரணமின்றி படப்பிடிப்பு கைவிடப்பட்டது.
தமிழ் படம் வெற்றிக்கு பிறகு c.s. அமுதன் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் இரண்டாவது படம். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படப்பிடிப்பு முடிவடைந்து இன்னும் ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
கருத்துக்களேதுமில்லை