அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர் கடனுதவி!
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் டொலரை வர்த்தக கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
N-95 மருத்துவ முகக் கவசங்கள், அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வர்த்தகக் கடன் இலங்கையில் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் உயர்தர மருத்துவப் பொருட்களின் கொள்வனவை உறுதி செய்வதற்கு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை