காலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்…

இப்பொழுது பலருக்கும் உடல் எடை பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதிக எடை உள்ளவர்களும் சரியான எடை உள்ளவர்களுக்கும் இந்த பயம் இருந்துகொண்டே இருக்கிறது. அதிக எடை உள்ளவர்களுக்கு நாம் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். சரியான எடை உள்ளவர்களுக்கும் நாம் எடை அதிகம் வைத்துவிடக் கூடாது இதை இப்படியே இருக்க செய்ய வேண்டும் என்ற கவலை ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் செய்யும் சிறு சிறு வேலைகளினால் நமது எடை நம்மை அறியாமலேயே ஏறிக் கொண்டிருக்கிறது.

​காலை பழக்கங்கள்

samayam tamil

நாம் தவிர்க்கக் கூடிய அந்த காரியத்தை நாம் செய்யும் இப்பொழுது நம்மிடம் நம்மை அறியாமலேயே அதிகரித்துக் கொள்கிறது. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப்பாடு அனைவராலும் செய்ய இயலாது வளரும் கட்டுப்பாடுடன் சாப்பிடுவது அவர்கள் வாழ்க்கை முறையில் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் உடற்பயிற்சி நடைப்பயிற்சி அனைவராலும் மனது வைத்தால் செய்யக்கூடிய ஒரு காரியமாகவே இருக்கிறது. இருந்தாலும் நாம் செய்யும் ஒரு சில செயல்கள் நம் உடல் எடையை மிகவும் அதிகமாக மாற காரணமாக அமைகிறது. குறிப்பாக காலையில் நாம் செய்யும் இந்த காரியங்கள் நம் உடல் எடையை மிகவும் அதிகமாக செய்கிறது அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

​அதிகமாக தூங்குவது

samayam tamil

அதிகமாக தூங்குவது நம் எடையை குறைப்பதற்கு சுத்தமாக எந்த உதவியும் செய்யாது. அதற்கு நேர்மாறாக அதிகமாக தூங்குவது நம் உடல் எடை அளவுக்கு அதிகமாக கூட்டுவதற்கு மிகவும் உதவி செய்கிறது. தூங்குவதற்கு என்று சில நேரங்கள் இருக்கின்றது. அதையும் தாண்டி அதிகமாகும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தினமும் 9 மணி நேரத்துக்கு மேலாக தூங்கினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோல் 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது உடலுக்கும் மனதுக்கும் பல பிரச்சனைகளையும் உண்டு பண்ணுகிறது. எனவே சரியான அளவில் நாம் தூங்குவது மிகவும் அவசியம்.

குறைவான அளவில் தூங்கினாலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். சரியான நேரத்திற்கு இரவு உணவை அருந்திவிட்டு சரியான நேரத்தில் தூங்கி, கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் 7 மணி நேரம் தூங்குவது நல்லது. இதுபோன்று அதிகமாக தூங்குவது உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நம் உடலில் சோம்பேறித்தனம் அதிகமாகி விடுகிறது. இதை நாம் தினமும் பழகிக் கொண்டே இருந்தால் நாம் தூங்கும் நேரம் இன்னும் அதிகமாகி விடுகிறது. பகலிலும் தூக்கம் வந்து விடுகிறது என்று கூறுகின்றனர்.

​காலை உணவே விடுப்பது

samayam tamil

பலபேர் அதிக நேரம் தூங்குவதால் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வேலைக்கு செல்ல வேண்டும் என்று அவசரகதியில் கிளம்பி காலை உணவை சாப்பிடாமல் வேலைக்கு சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. அதே நேரத்தில் இரவு உணவையும் அதிகம் சாப்பிடுவது அவர்களின் பழக்கமாக மாறி விட்டது. காலை நன்றாக சாப்பிட வேண்டும். குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள் காலை மிகவும் நன்றாக சாப்பிடவேண்டும். காலை நன்றாக சாப்பிட்டால் மட்டுமே உடலின் மெட்டபாலிசம் அளவு சீராக இருக்கும். மெட்டபாலிசம் உடல் எடையை குறைப்பதற்கு உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை அதிகரிக்க வழி வகுப்பது மட்டும் அல்லாமல் அன்றைய நாளில் நம் வேலையை சரிவர செய்யாமல் இருப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

​தேவையான அளவு தியானம் செய்யாமல் இருத்தல்

samayam tamil

இன்று இருக்கும் வாழ்க்கை சூழலில் யோகா தியானம் போன்றவை நம்மில் பலரும் செய்வதில்லை. தியானம் என்பது என்ன மதத்தை சார்ந்த ஒரு விஷயமும் கிடையாது. தியானம் என்பது நம் மனதை கட்டுப்படுத்த நம் மனதில் உள்ள பிரச்சனைகளை கட்டுப்படுத்த நம் மனதையும் நம் உடலையும் மகிழ்ச்சியாக வைக்க ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. காலை எழுந்து சிறிது நேரம் தியானம் செய்வது நம் மன சோர்வு, மன பதட்டத்தை மட்டுமே விரட்டும் என்று நினைக்கக்கூடாது. மன சோர்வு நீங்கி, மன பதட்டம் நீங்கினாலே உடலிலுள்ள பல பிரச்சனைகள் நீங்கி உடல் எடை கூடாமல் பாதுகாப்பாக இருக்கும். தினமும் காலை எழுந்து 10 நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை தியானம் செய்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும் என உலகம் முழுவதும் உள்ள பல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

​உடற்பயிற்சியை தவிர்ப்பது

samayam tamil

இன்று இருக்கும் பரபரப்பான சூழலில் உடற்பயிற்சி பலரும் யோசித்துக் கூட பார்ப்பதில்லை. காலையில் எழுந்திருக்கவே பலரும் நேரம் எடுத்துக் கொள்கின்றனர். அவசர அவசரமாக கிளம்பி அவசர அவசரமாக உணவு அருந்தி விட்டு வேலைக்கு சென்றுவிட்டு மிகவும் களைப்போடு திரும்புகின்றனர். அந்த களைப்பு மன பதட்டம் மன அழுத்தம் அவர்களுக்கு நல்ல உறக்கத்தையும் தருவதில்லை. இரவு தூங்குவதற்கு பல மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன. இரவு தூங்குவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதால் காலை எழுந்திருக்கவும் அவர்களுக்கு நேரம் ஆகிறது. எனவே மனதில் உள்ள பதட்டம் மன அழுத்தம் போன்றவை நம் வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது. அதைப் போக்க மேலே சொன்ன மாதிரி தியானம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு பின்பு சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் அதை சீராக வைக்கவும் பெருமளவு உதவி செய்கிறது.

​தண்ணீர் அருந்தாமல் இருப்பது

samayam tamil

நம் உடல் அதிகமாக தண்ணீர் சார்ந்தே. நம் உடல் இயங்குவதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது பலவிதமான நோய்கள் வருவதற்கும் காரணம். நாம் போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, என்று பலரும் கூறுகின்றனர். காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் குடித்து வருவது மிகவும் முக்கியம் என்று கூறுகின்றனர். தினமும் இது போல் காலை ஒரு கப் தண்ணீர் குடிப்பது மாரடைப்பிலிருந்து கூட நம்மை பாதுகாக்கும் வல்லமை படைத்தது என்று கூறுகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. பலரும் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். உடலை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.