373 கடற்படையினருக்குக் கொரோனா! 14 பேர் சிகிச்சையின் பின் குணமடைவு இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தல்

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 373 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

நேற்றிரவு 9 மணிவரையான கணக்கெடுப்பின்போது இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

தொற்றுக்குள்ளாகியுள்ள கடற்படையினரில் இதுவரை 14 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு நேற்றிரவு தெரிவித்துள்ளது.

இவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறிய போதிலும், சுகாதார ஆலோசனைக்கு அமைய இவர்களை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.