ருமேனிய ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஏழு இலங்கையர்களிற்கு கொரோனா – இலங்கையர்கள் பணிநீக்கம்!
ருமேனியாவின் ஆடைதொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அனைவரும் வேலைக்கு சமூகமளிக்காமை காரணமாகவே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவே குறித்த இலங்கையர்கள் வேலைக்கு செல்ல மறுப்பு தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ருமேனிய மக்களிற்கு உள்ள உரிமைகள் இலங்கை தொழிலாளர்களிற்கும் உள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை