பாடசாலைகளை கிருமி நீக்கம் செய்ய அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளின் படி பாடசாலைகளில் கிருமி ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு நிதி வழங்காவிட்டல் இந்த சுகாதாரத் தேவைகளை மேற்காெள்ள பெற்றோர்களிடம் பணம் அறவிடுவதற்கு அதிபர்கள் நிர்ப்பந்திக்கப்படுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பித்தால் தொடர்ந்தும் தினமும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதால் தேவையான நிதியை வழங்குவதற்கு அரசாங்கம் இப்போதே தேவையான ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அல்லது பெற்றார்கள் இது தொடர்பாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவர் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
50 மாணவர்களுக்கு ஒரு நீர் குழாய் எனும் அடிப்படையில் வசதி செய்யப்பட வேண்டும். கைகளைக் கழுவிக் கொண்டு பாடசாலைக்குள் நுழையும் வகையில் வாயிலில் நீர் குழாய் பொருத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழிகாட்டல்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை