கடலில் சிக்கி தவிக்கும் 310 கனேடியர்களின் நிலை என்ன?

உலகில் ஏறக்குறைய 100 கப்பல் கப்பல்களில் குறைந்தது 310 கனேடியர்கள் சிக்கி தவிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால், ஒவ்வொரு நாடுகளிலும் போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடல் பயணங்களில் ஏராளாமானோர் சிக்கியுள்ளனர்.

இந்தநிலையில் கப்பல்களில் பணிபுரிவோர் நாடு திரும்ப முடியாமல் கடலில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த பட்டியலில் 310 கனேடியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கம் மற்றும் கப்பல் நிறுவனங்கள் அவர்களை திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும், கொரோனா அச்சம் காரணமாக, துறைமுகங்களில் இறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

எமரால்ட் பிரின்சஸ், டிஸ்னி ட்ரீம், மற்றும் நார்வேஜியன் எபிக் உள்ளிட்ட பல கப்பல்களில் இருந்து வந்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குழுவினர் என பலர் உள்ளனர்.

கப்பலில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறையில் இருப்பதைப் போல வாழ்ந்து வருவதாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.