ஒன்ராறியோ மருத்துவமனைகள் கட்டாயம் நிறைவுசெய்திருக்க வேண்டிய விதிமுறைகள்

மருத்துவமனைகள் கொவிட்-19 நோய்த்தொற்றினை எதிர்கொள்ளும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் சமவேளையில், திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் அன்றாட மருத்துவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஒன்ராறியோ அரசு விரிவான கட்டமைப்பொன்றை உருவாக்கியுள்ளது.

திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் மற்றும் அன்றாட வைத்திய நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர், மருத்துவமனைகள் கட்டாயம் நிறைவுசெய்திருக்க வேண்டிய விதிமுறைகளை மேற்படி கட்டமைப்பு விளக்குகிறது. அவையாவன:

கொவிட்-19 நோயாளர்களுக்கு வேண்டிய மருத்துவப் பிரிவைகளை நிலையான எண்ணிக்கையில் பேணுதல்.
கொவிட்-19 பிரிவுக்கு வேண்டிய பாதுகாப்புக் கவசங்கள், கருவிகள், மருந்துகள் போன்றவற்றை குறைவடையாது நிலையான எண்ணிக்கையில் வைத்திருத்தல்.
உள்நோயாளிகளுக்கும் தீவிர சிகிச்சை நோயாளிகளுக்குமான படுக்கைகளை போதுமான அளவிலான கொண்டிருத்தல்.
போதுமான அளவு சுகாதார ஊழியர்களைப் பணிக்கமர்த்தியிருத்தல்.
நோயாளிகள் தீவிர வைத்தியசாலை சிகிச்சையை முடித்து வெளியேறியபின், அவர்கள் வெளியில் பெறக்கூடிய மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்துதல்.

அறுவைச் சிகிச்சைகளை மீண்டும் தொடங்குவதற்கான கால வரையறைகள் ஒவ்வொரு மருத்துவமனைகளைப் பொறுத்தும் வேறுபட்டதாக அமையலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.