மாதவன் பெரிதும் நம்பியிருந்த படத்தை வாங்கிய OTT.. கிடுக்கிப்பிடி போடும் அமேசான்

ஒரு காலத்தில் லவ்வர் பாயாக நடித்துக் கொண்டிருந்த போது தமிழக ரசிகர்கள் இடையே இருந்த வரவேற்பு மாஸ் ஹீரோவாக மாறிய பிறகு மாதவனுக்கு சுத்தமாக கிடைக்கவில்லை. ரன் படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து அதே மாதிரி பல படங்கள் வந்தால் தமிழ் சினிமா அவரை கண்டுகொள்ளவில்லை.

ஹிந்தியில் அவ்வப்போது 3 இடியட்ஸ் போன்ற சிறந்த படங்களில் நடித்து வந்தார். கடைசியாக மாதவன் நடிப்பில் தமிழில் வெளியான விக்ரம் வேதா, இறுதிச்சுற்று ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனால் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் நடிக்க முடிவு எடுத்த மாதவன், அனுஷ்காவுடன் சேர்ந்து நடித்து இருந்த நிசப்தம் என்ற திரில்லர் படத்தை பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அந்த படத்தை தற்போது அமேசானில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இந்த படத்தை வாங்கிய அமேசான் நிறுவனம் விரைவில் அதை வெளியிட போவதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தான் ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படத்திற்கு தியேட்டர்காரர்கள் இடையே கடும் எதிர்ப்பு நிலவியது.

இருந்தாலும் தொடர்ந்து படங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தும் அமேசான் நிறுவனம், தமிழ் சினிமாவில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப்போற்று போன்ற படங்களுக்கு வலைவிரித்து பார்த்துள்ளது, இருந்தாலும் ரசிகர்களுக்காக நடிகர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து விரைவில் மாதவன் அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் நிசப்தம் படமும் அமேசானில் வெளியாக உள்ளது. ஜோதிகா படத்துக்கு வந்த எதிர்ப்பு மாதவன் படத்திற்கு வரவில்லை என்பதுதான் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.