தற்போதைய நிலையில் தேர்தலை நடாத்தினால் அது தொற்று நோய் பரவுவதை அதிகரிக்கும் :முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ் நிலையில் தற்போது தேர்தலை நடாத்தினால் அது கொரோனா கொவிட்19 தொற்று பரவுவதை அதிகரிக்கும் .3ம் உலக மகாயுத்தம் போன்று நாட்டு நிலைமைகள் மாறியிருக்கிறது இந்த நிலையில் தேர்தல் ஒன்று முக்கியமல்ல என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள அலுவலகத்தில் நேற்று (09) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைக்கையில்
இரு பிரதான ஊடகங்கள் முஸ்லிம்கள் மீது கொவிட்19 தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளியிட்ட போதும் அரசாங்கம் அதை கண்டு கொள்ளவில்லை உலகில் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் 70 நாடுகளில்
கொரோனா மூலம் உயிரிழந்த ஜனாசாக்களை அடக்கவும் முடியும்
எனக் கூறியபோதும் அதை இங்கு ஏற்காமல் முஸ்லிம்களின் மனதை நோகடிக்கிறார்கள்.
இந்த நாட்டினை பொறுத்தமட்டில் முறையாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முன்னால் சபாநாயகர் ஊடாக பாராளுமன்றத்தை ஜனாதிபதி தலைமையில் கூட்டி பேசியிருக்க வேண்டும் இதனால் எந்த நஷ்டங்களும் ஏற்படாது சம்பளத்தையோ சலுகைகளையோ எதிர்பார்க்கமாட்டோம்.
நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டி சுமூகமான நிலை ஏற்படுமாயின் தேர்தலை தயார்படுத்தலாம்.
தேன்தலை மட்டுப்படுத்த முடியாது அன்றைய ஜனாதிபதி தேர்தலின் போது பிரதான வேட்பாளர்களாக கோத்தபாய ராஜபக்ச, சஜீத் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க போன்றோர்களே இருந்தனர் தற்போதைய தேர்தலின் படி மாவட்ட ரீதியாக ஒரு கட்சியில் இருந்து ஏழுபேர் உட்பட திருகோணமலையில் மாத்திரம் 160 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளார்கள் இவ்வாறு இருக்க தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தால் தொற்று நோய் பரவுவதை அதிகரிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை கொண்டு சமூக ஒற்றுமைக்காக சகல இன மத மக்களும் ஒன்றாக வாழ்வதற்கு ஜனாதிபதி இந்த தருணத்தில் தங்களது ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை