மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று..!

பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது மற்றும் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அதில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் உத்தரவு மற்றும் சட்டப்பூரவமான அதிகாரங்களை உள்ளடக்கிய குறித்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும்.

மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் பணியாற்ற வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பொதுப்போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாகவும் அதில் அறிவிக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.