சிகையலங்கார நிலையங்களில் பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம் Dr.கு.சுகுணன்

பாறுக் ஷிஹான்

சிகையலங்கார நிலையங்களில்  பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம்    என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட  கொரோனா வைரஸ் தொடர்பில்   ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல்  இடம்பெற்ற போது  மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சிகை அலங்கார நிலையங்களை பொறுத்தளவில் மிக அவதானமாக இருக்க வேண்டிய நிலை கொவிட் 19  காலத்தில் திரும்பியுள்ளது ஏனென்றால் சலூன்களில் மிக அன்னியோன்யமாக சேவை வழங்குநர் தலைமுடி வெட்டுபவர்களாக  காணப்படுவதன் காரணமாக இந்த தொற்று நோய் காலங்களில்  பரவுவதற்கான கூடுதலான சந்தர்ப்பங்கள்  காணப்படுகின்றது.

இதற்காக புதிய சுற்றுநிருபம் ஒன்று அமைச்சினால் எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது . குறித்த சிகையலங்கார நிலையங்களை திறப்பதாக இருந்தால் குறித்த பிராந்தியத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். குறித்த சலூன்களில்  வேலை செய்பவர்களையும் அவதானித்து இட வசதியினையும் கருத்திற்கொண்டு அந்த சான்றிதழ் சரியாக இருக்குமாயின் கொடுக்கப்படும். சலூன்களை  பொறுத்த அளவில் அங்கு வருபவர்களுக்கு நேரங்களை கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களை உள்வாங்கி அவர்களது வேலைகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். குறித்த கடைகளில் காத்திருந்து சிகை அலங்காரம் செய்பவர்கள் ஒருவர் அல்லது இருவர் மாத்திரமே மட்டுப் படுத்தப் பட்டுள்ளனர் அவர்களுக்கிடையே சமூக இடைவெளி நிச்சயமாக பேணப்பட வேண்டும். குறித்த கடைகளில் பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் இயங்கும் படக்கூடாது சலூன்களில் பாவிக்கும் துணிகள் கத்தரிக்கோல் சீபபு என்பன தொற்றுநோய்களை பயன்படுத்தி தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். முக்கியமாக முடி திருத்துபவர் திருத்தத்தை மேற்கொள்ள வரும் முகபாவங்களை அணிந்திருக்க வேண்டும் இந்த நடைமுறைகளை பின்பற்ற அவர்களின் கடைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.