காரைதீவு மண்ணை சேர்ந்த சொல்லிசை கலைஞர் பருவிந்தன் சிறப்பு பார்வை…

காரைதீவு மண்ணை சேர்ந்த சொல்லிசை கலைஞர் பருவிந்தன் அவர்களை அறிமுகம் செய்வதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம் .

நம் நாட்டு இளைஞர்களுக்கு முக்கியத்தும் வழங்குவதில் நம் Tamilcnn பெரும் பங்கு வகிக்கின்றது அந்த வகையில் இளம் வயதில் தான் ஒரு சொல்லிசை கலைஞனாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு பல சொந்த பாடல்களை பாடி வருகின்றார் பருவிந்தன். ஒருபக்கம் தனது கல்வி மறுபக்கம் சொல்லிசை என்று எழுந்து வரும் பருவிந்தன் இலங்கை மண்ணின் சொல்லிசை பக்கத்தில் விரைவில் அசைக்க முடியாத காலடி தடத்தினை பதிப்பர் என்பது உறுதி. தன் கீழ் hiphop ஹீரோஸ் என்ற குழுவினை அமைத்து அதன் மூலம் தனது நண்பர்களுடன் பல பாடல்களை பாடி இணைய தளத்தின் மூலம் பிரபல்லியம் ஆகி வரும் பருவிந்தன் கடந்த வருடம் இடம் பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தினை கொண்டு மக்களை விழிப்படைய செய்யும் முகமாக உருவாக்க பட்ட பாடல் ”நம் ஆயுதம்” மக்களின் பெரும் வரவேட்பினை பெற்றது.

அந்த வரிசையில் இந்த வருடமும் இவர்களால் பல பாடல்கள் உருவாக்க பட்டுள்ளது பரவிந்தன் மிக வேகமாக சொல்லிசை பாடுவதில் திறமை வாய்ந்தவர் இவர்களால் மீள் உருவாக்கப்பட்ட பாடல் “மடை திறந்து” மிக விரைவில் வெளிவரவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.