வந்த வேகத்தில் காணாமல் போன நடிகைகள்.. கடைசியில் கவர்ச்சியும் கை கொடுக்கவில்லை

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றியை பெற்று காலப்போக்கில் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன நடிகைகள் லிஸ்ட்டை பற்றி பார்ப்போம்.

ஸ்ரீதிவ்யா:

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதன் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஸ்ரீதிவ்யா கதை தேர்வில் சொதப்பி தற்போது தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார்.

ஹன்சிகா மோத்வானி:

தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா சமீப காலமாக உடல் எடையை குறைத்து நோய் தாக்கியது போல் ஆகிவிட்டார். இதனால் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்து வந்த ஹன்சிகா தற்போது ஒரு படம் கூட கைவசம் இல்லாமல் தடுமாறி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்:

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன் தமிழிலும் ஏழாம் அறிவு என்ற வெற்றிப் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சில பட வாய்ப்புகள் வந்தாலும் தன்னுடைய சொந்த காதல் விஷயத்தில் ஈடுபட்டு சினிமா வாய்ப்பை எடுத்துக் கொண்டார்.

ஸ்ரேயா:

தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் ஜோடி போட்டு மிகப் பெரிய நாயகியாக வலம் வந்தார் ஸ்ரேயா. கேரியர் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும்போது வடிவேலு ஹீரோவாக நடித்த படத்தில் வடிவேலுவுடன் ஜோடி போட்டு ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அதுவே அவரது சினிமா வாழ்க்கைக்கு ஆப்பாக மாறிவிட்டது.

தமன்னா:

தமிழ் சினிமாவில் இதுவரை தமன்னாவுக்கு என்று பெரிய அளவில் ரசிகர்கள் இருந்ததே கிடையாது. இருந்தாலும் எப்படியோ காலம் தள்ளி கொண்டு இருந்த தமன்னாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் சுத்தமாக வருவதில்லையாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.