நன்னீர் மீன் இனங்களின் விலை அதிகம்-நுகர்வோர் விசனம்
அம்பாறை மாவட்டத்தில் ஆறு குளம் ஆகியவற்றில் குறைந்தளவு மீன் இனங்கள் பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை, கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் கிட்டங்கி பாலத்திற்கருகே சிறிதளவாக பிடிக்கப்படும் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் என்றும் இல்லாத வகையில் விலை அதிகரித்துள்ளது.குறித்த மீன்கள் யாவும் எறிதூண்டல், அத்தாங்கு மற்றும் எறி வலை மூலம் பிடிக்கின்றதுடன் மீன்களின் விலையேற்றத்திற்கு காரணம் சட்டவிரோத இழுவை வலை தங்கூசி வலை பயன்பாடு என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வலைப்பாவனை காரணமாக மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன் நீர்வாழ் தாவரங்கள் அழிவடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.மழைகாலங்
குறித்த நன்னீர் மீன் பிடியானது தற்போது கிட்டங்கி ஆறு கல்லாறு கோட்டைக்கல்லாறு ஆறு மருதமுனை கரச்சைக்குளம் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
இதில் கோல்டன் செப்பலி கணையான் கொய் கொடுவா கெண்டை விரால் சுங்கான் விலாங்கு போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) பனையான் மீசைக்காரன் ஆகியவை குறைந்த விலையில் விற்பனையாகின்றன.
கருத்துக்களேதுமில்லை