சுமந்திரனின் கருத்து கண்டனத்துக்குரியது . முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன்…
சந்திரன் குமணன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று தனது அலுவலகத்தில் மாலை கருத்து தெரிவிக்கையில்…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ள நேர்காணல் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் இந்த நாட்டில் பல இன்னல்களை சந்தித்த வேளை அதற்கு ஈடு கொடுக்க முடியாத சூழ்நிலையில் பெரும்பான்மை தலைவர்களால் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைக்கு எதிராகவே தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள். அந்தப் போராட்டத்தை இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மாத்திரமல்ல புலம்பெயர் தமிழர்களும் வலு சேர்த்திருக்கிறார்கள் அந்த சிந்தனையின் ஊடாகவே தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தேர்தல்களில் ஆதரித்து தங்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே அனுப்பியிருந்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இன்று தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மிகவும் மனவேதனையுடன் இந்த நாட்டில் ஒரு நலிவற்ற இனமாக தொடர்ந்தேர்ச்சியாக பார்க்கின்ற நிலையில் இந்த காலத்தில் வெளியிடப்பட்ட கருத்தானது தமிழ் மக்களின் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும் சிங்கள கடும்போக்குவாத தலைவர்கள் கூட விடுதலைப் புலிகளின் தலைவர்களை விடுதலை புலிகளையும் உயர்வாக பார்க்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடமிருந்து இந்த கருத்துக்கள் வருவது மிகவும் கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை