2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு பேஸ்புக், கூகுள் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீடித்துள்ளன.

கொரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க கூறி வரும் நிலையில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளன.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை ஜூன் 1 ஆம் திகதி நீடித்துள்ள அதேவேளை தற்போது வாய்ப்பு இருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதுமே வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஜூலை 6 வரை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கி இருந்த பேஸ்புக், பணியாளர்கள் விரும்பினால் 2020 முழுவதும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.