சிங்களவருடன் கூடிக்குலாவியவருக்கு ஈழப்போராட்டம் பற்றி என்ன தெரியும்? சுமந்திரன் மீது சித்தார்த்தன் பாய்ச்சல்
உண்மைதான் ஐந்து வயதில் இருந்தே கொழும்பில் தவழ்ந்து கல்வி கற்று சிங்கள நண்பர்களோடு கூடிக் குலாவும் ஒருவருக்கு எமது மக்களின் உரிமைப் போராட்டம் தெரிந்திருக்கும் அல்லது அதன் வலிகள் உணர்ந்திருக்கும் என்பதில் எந்தவித நியாயமும் இல்லை அதை அவர் உய்த்துணர்ந்திருக்கவும் மாட்டார்.
அப்படியான ஒருவருக்கு எமது உரிமைக்கான ஆயுத போராட்டத்தின் வலிமை அந்த ஆயுத போராட்டத்திற்கு தமிழ் மக்கள் வழங்கிய தார்மீக ஒத்துழைப்பு அதன் தொடர்ச்சி என்பவை பற்றியெல்லாம் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை அல்லது அறிந்திருக்கவுமில்லை என்பதே உண்மை.
இந்நிலையில் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தினை ஆயுத முனையில் அடக்கி ஒடுக்க முனைந்தமையினால்தான் தமிழரும் ஆயுதத்தினை ஏந்தி போராட முனைந்தார்கள் என்று அறியாத ஒருவரிடம் தமிழரின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது. அவரும் தமிழ் மக்களின் போராட்ட வரலாறு அறியாமல் கருத்துரைக்க முனைவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் ரஞ்சன் ராமநாயக்கா வழக்கு, ஊரடங்கு தொடர்பான வழக்கு, என்பவை பற்றி தானே பேட்டி காண்பவர் கேள்வி எழுப்பலாம். அவரிட்ட போய் தமிழரின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் தொடர்பாய் கேள்வி கேட்டால் இப்பிடி தானே சொல்லுவார். இது என்ர கருத்து.
கருத்துக்களேதுமில்லை