ஹட்டன் பகுதியில் சுகாதார வழிமுறைகளுக்கு அமையே பாபர் சலூன்களை திறக்க முடியும்.சுகாதார பிரிவினர் தெரிவிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

கொரோனா தொற்று அச்சுறுத்தலினை தொடர்ந்து ஹட்டன் பகுதியில் பாபர் சலூன்களை தேசிய சுகாதார செயத்திட்டத்திற்கு அமைவாகவே திறக்க முடியுமென ஹட்டன் சுகாதார பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஹட்டன் பகுதியில் உள்ள சலூன்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள்,அழகுக்கலைகள் நிலையங்கள் ஆகிய திறக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (12) ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் பாலசந்திரன் தலைமையில் ஹட்டன் டிக்கோயா நகர மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் பாபர் சலூன் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள்,அழகுக்கலை நிலையங்களில் பணிபுரிபவர்களை அழைத்து தேசிய சுகாதார வேலைத்திட்டத்திற்கமைவாக திறக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதன் போது தலைமயிர் வெட்டுதல் கட்டையாக்குதல்,வர்ணமிடுதல்,நகம் வெட்டுதல் சுத்தப்படுத்துதல் ஆகியவற்றிக்காக மாத்திரமே குறித்த நிலையங்களை திறக்க முடியுமெனவும்,குறித்த செயப்பாடுகளுக்காக கட்டாயமாக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தொற்று நீக்கம் முறையாக செய்யப்பட வேண்டும்,காற்றோட்டமாக இருக்க வேண்டும் இடைவெளி  பேணவேண்டும்,தலைமயிர் அகற்றுவது முகக்கவசம் கையுறை போன்ற அகற்றுவதற்கு பொருத்தமாக குப்பைக்கூடைகள் வைத்திருத்தல் வேண்டும்,கைகழுவுவதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு நாளும் தேசிய சுகாதார பொறிமுறைக்கமைவாக வழங்கப்பட்டுள்ள மதீப்பீட்டு பட்டியலினை சரி பார்த்த பின்னரே வேலைகளை தொடங்க வேண்டும்.குறித்த செயப்பாடுகளை கண்காணிப்பதற்காக பெது சுகாதார பரிசோதகர் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்
ஹட்டன் பகுதியில் பாபர் சலூன்,சிகை அலங்கார நியைம் அழகுக்கலை நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 80 பேர் வரை இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வுக்கு ஹட்டன் டிக்கோயா நகர சபையின் உபதலைவர் ஏ.ஜெ.எம் பாமிஸ் செயலாளர்,சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.