கரைச்சி பிரதேச சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
கரைச்சி பிரதேச சபையின் அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் 27ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போதே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தோர் நினைவாக சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சபை அமர்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை