ரஜினியையே வியக்க வைத்த நடிகர்.. அவரின் வெற்றி ரகசியங்களை அறிய துடித்த சூப்பர் ஸ்டார்
இன்று யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு போட்டி கொடுக்கலாம். ஆனால் அவர் உச்சத்தில் இருந்தபோதே கமல் ரஜினி என்ற இருவரின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் அசைத்துப் பார்த்தவர் தான் மைக் மோகன்.
தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் மைக் மோகன் என்றால் அது மிகையாகாது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தார்.
அதுமட்டுமில்லாமல் அன்றைய இளம் நாயகிகளின் கனவு நாயகனாகவும் விளங்கி வந்தார். தான் நடித்த படங்களில் பெரும்பாலும் மைக் பிடித்து பாடல்கள் பாடியபடி நடித்ததால் அவருக்கு மைக் மோகன் எனும் பட்டப்பெயர் ஒட்டிக் கொண்டது.
அது என்னமோ தெரியவில்லை இளையராஜா, மோகன் படங்களுக்கு மட்டும் சூப்பர் ஹிட் பாடல்களை அமைத்துக் கொடுத்துவிடுவார். பாடல்களை வைத்தே பல வெற்றி படங்களை கொடுத்த நாயகன் என்றும் சொல்லலாம்.
ஒரு தடவை மைக் மோகனின் தொடர் வெற்றிகளை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் அவரிடம், எப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்கிறீர்கள் என்ற ரகசியத்தை தனக்குச் சொல்லித் தருமாறு கேட்டதாக சமீபத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் நேரலையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை