மாஸ்டரின் 200 கோடி வியாபாரத்துக்கு விழுந்த துண்டு.. அவசர அவசரமாக ரிலீஸ் தேதி முடிவு

ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் மாஸ்டர் படம் கொரானா பாதிப்பால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இதனால் படக்குழு மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இருந்தாலும் அடுத்ததாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்ய முடியாத நிலையில் தவித்து வருகிறது மாஸ்டர் படக்குழு.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், கத்தி படத்திற்கு பிறகு அனிருத்தும் இந்த படத்தில் பணியாற்ற உள்ளதாக கிடைத்த செய்தியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்துமே இணையத்தில் செம ஹிட். அதிலும் வாத்தி கமிங் பாடல் உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் படத்தின் வியாபாரமும் சுமார் 200 கோடிக்கு ஜனவரி மாதத்திலேயே முடிக்கப்பட்டது.

இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருந்தனர். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி சென்றாலும் தற்போது உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல் காரணமாக படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதி பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டு வருகின்றனர்.

காரணம் ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் உடனடியாக தியேட்டர்களுக்கு கூட்டம் கூட்டமாக படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் என்பதை அறிந்து விநியோகஸ்தர்கள் பயத்தில் உள்ளனர். விஜய்யின் படங்களுக்கு வெளிநாடுகளிலும் செம வரவேற்பு இருப்பதால் தற்போது அங்கேயும் வசூல் நிலவரங்கள் பாதிக்கப்படும் நிலைமையில் உள்ளது.

அதை விட பெரிய பிரச்சனை மாஸ்டர் படத்திற்கு என்னவென்றால் இணைய தளம் தான். முழுப் பணிகளும் முடிந்த மாஸ்டர் படத்தை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்க முடியாது என்பதை யோசித்து வருகிறார்களாம். ஏற்கனவே விஜய்யின் தலைவா படத்தை இணையத்தில் வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் விழிபிதுங்கி உள்ள மாஸ்டர் படக்குழுவினர், மாஸ்டர் படத்தை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிடலாம் என தற்போதைக்கு முடிவு செய்துள்ளார்களாம். இருந்தாலும் சினிமாவைச் சேர்ந்த மூத்த விநியோகஸ்தர்கள் கண்டிப்பாக மாஸ்டர் படம் 2020 ஆம் ஆண்டு வெளி வர வாய்ப்பு இல்லை எனவும் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட தேதியில் மாஸ்டர் படம் வெளியாகி இருந்தால் பிகில் படத்தின் 300 கோடி வசூலை அசால்டாக மிஞ்சி இருக்கும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.