சுமந்திரனின் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்தினை ஏற்கவே முடியாது: ஸ்ரீநேசன் பதிலடி…

தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே தவிர விளையாட்டுக்காகவோ, ஆசைக்காகவோ அவர்கள் ஆயுதம் எந்தவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.,

அண்மையில் சகோதர மொழித் தொலைகாட்சி ஒன்றிற்கு த.தே.கூ முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் ஊடகப்பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள் செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார்.அதில்,விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தியதை ஏற்கவே முடியாது என்றார்.

விடுதலைப்புலிகள் விளையாட்டுக்காகவோ,பொழுது போக்குக்காவோ ஆயுதமேந்தியிருந்தால் சுமந்திரன் கூறியதை ஏற்றிருக்க முடியும். மாறாக,அவர்கள் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமான
சூழலில்,தியாக சிந்தையுடன் தமிழினவிடுதலைக்காகவே ஆயுதமேந்தினார்கள்
எனபதை சுமந்திரனால் ஏன் உணரமுடியவில்லை என்பதுதான் புரியாத புதிராகவுள்
ளது.

ஏறத்தாழ ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகள் அஹிம்சை ரீதியாக,மறுக்கபட்ட அரசியல்
உரிமைக்காகப் போராடினர்.தனிச்சிங்களச்சட்டம்,பிரசாவுரிமைச்சட்டம்,பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல், திட்டமிட்ட பேரினக்குடியேற்றம், அரசமதம் பௌத்தம். இனவன்முறைகள் என்ற சட்டங்கள்,சதிகள் மூலம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டபோதும் எமது
மக்கள் அகிம்சை வழிகளில்தானே போராடினார்கள் அகிம்சைக்கு மரியாதை கொடாமல், இம்
சைகளால் எமது மக்களை அரசு அடக்கியது. ஒப்பந்தங்கள்,உடன்படிக்கைகளை பேரின அரசு செயத்து,பின்னர் கைவிட்டது.

ஏமாற்றம் ஏமாற்றம்  வேறுவழிகள் எல்லாம் முடக்கப்பட்டன,தமிழ் மக்கள் அடக்கப்பட்டனர். இளைஞர்கள்,யுவதிகளின் கல்விக்கும் கூட அரசு ஆப்பு வத்தது.

ஈற்றில் ஒரே மாற்றுவழியாக,அரசு கூறாமல் கூறிய மார்க்கம் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்தமைதான் ஆசாபாசங்கள் அத்தனையையும் தியாகம் செய்து விட்டு தமிழர் விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதிகளாக்கிய தமிழ் மறவர்கள் பக்கமாக விரல் நீட்ட
எவருக்கும் அருகதையில்லை. எழுந்தமானமாக எவர் மீதும் விரல் நீட்டுவதைத் தவிர்ப்போம்.
மீண்டும் கூறுகின்றேன் இளைஞர்கள் விளையாடுவதற்காக ஆயுதம் தூக்கவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.