பொதுத்தேர்தலை ஒத்திவைக்குக! – ஆணைக்குழுவிடம் ஐ.தே.க. வலியுறுத்து
நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்ற போதிலும் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாக இருக்கின்ற போதிலும் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என அரசு அறிவித்தமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டார்.
எனவே, இத்தகையதொரு நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு தனது முழுமையான அதிகாரங்களைப் பயன்படுத்துவதுடன் சுகாதாரப் பிரிவினருடன் கலந்தாலோசித்து நாட்டு மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் இன்றைய கலந்துரையாடலில் கேட்டுக்கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை