கொரோனா – பிரிட்டனின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை, 40 ஆயிரத்தைக் கடந்தது!!!
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சுமார் 10,000 பேர், பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸால் தொற்றால் இறந்துள்ளதாக, ONSஇன் இறப்புகள் குறித்த அண்மைய அதிகாரப்பூர்வ புள்ளிவிவர தரவுச் சேர்க்கையில் தெரிய வந்துள்ளது.,
தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் நேற்று செவ்வாயன்று (11.05.20) வெளியிட்ட புள்ளிவிரங்களின்படி, கொரோனா வைரசுடன் தொடர்புடைய 35,044 இறப்புகள், பிரிட்டன் மற்றும் வேல்ஸில் மே 9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.. ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான அண்மைய புள்ளிவிவரங்களையும், NHS ன் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளில் நிகழ்ந்த, அரசாங்கத்தால் தினமும் அறிவிக்கப்பட்ட இறப்புக்களையும் சேர்த்து, பிரிட்டனின் உத்தியோகபூர்வமாக இறப்பின் மொத்த எண்ணிக்கை இப்போது 40,011 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரிட்டனை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் (ஜே.எச்.யூ) தொகுத்த தரவுகளின்படி, இத்தாலியில் 30,739, ஸ்பெயினில் 26,744, பிரான்ஸில் 26,604 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் 7,661 இறப்புகள் பதிவாகியுள்ளன.
JHU ஆல் வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையில், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளில் நிகழ்ந்த இறப்புகள் ஒருபோதும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன, இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தொற்றுநோய் ஏற்பட்ட பின்னர் முதல்முறையாக பொது மக்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என ONS புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் மோசமான பாதிப்புகளின் மையமாக இருந்த லண்டனில், தற்போது வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தென்கிழக்கில் அதிக பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எந்தவொரு பிராந்தியத்திலும் கோவிட் -19 இறப்புகளில் மிகக் கடுமையான வீழ்ச்சியை தலைநகரம் பதிவு செய்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட கோவிட் -19 இலிருந்து பிரித்தானிய பராமரிப்பு இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட இரண்டாவது வாரத்தில். மொத்த இறப்புகள் 8,314 ஆக உயர்ந்தன, ஆனால் வாராந்திர இறப்புகள் 1,503 ஆகக் குறைந்துளன. இது ஏப்ரல் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2,379 ஆக இருந்தது, இது தொற்றுநோய் பராமரிப்புத் துறையில் மிகவும் அழிவுகரமான உச்சத்தை எட்டிய நிலை என கருதப்பட்டது. மேலும் 350 பேர் வேல்ஸில் உள்ள பராமரிப்பு இல்லங்களிலும், 1,201 ஸ்கொட்டிஷ் பராமரிப்பு இல்லங்களிலும் இறந்துள்ளனர், இது ஸ்காட்லாந்தில் நடந்த அனைத்து கோவிட் -19 இறப்புகளில் 43% ஐக் குறிக்கிறது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட இறப்புகளை 10,949 ஆக உயர்த்தியிருக்கிறது.
கருத்துக்களேதுமில்லை