யார் எப்படி போனால் எனக்கென்ன.. மீண்டும் வேலையை தொடங்கிய சினிமாக்காரர்கள்
உலகம் முழுவதும் கொரானா பாதிப்பால் துவண்டு போயுள்ளனர். பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு பணியும் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் சினிமாத்துறையில் வழக்கம்போல் வேலைகள் தொடங்கிவிட்டன. மே 11ஆம் தேதி முதல் சூட்டிங் இல்லாமல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மட்டும் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கும் சிறுதளவு ஏற்பட்டுள்ளதால் அனைவரும் தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதனடிப்படையில் பலரும் தங்களது படங்களின் Post-production பணிகளை துவங்கி விட்டன. அதிலும் குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் படத்தின் பணிகள் இரண்டு இடங்களில் தொடங்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வேலைகள், சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் வேலைகளும் பரபரப்பாக தொடங்கியுள்ளன. மேலும் சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது தமிழ்நாட்டில் கொரானா பாதிப்பே இல்லாததைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் கொரானா பாதிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தாலும் சகஜமாக அனைவரும் தங்களது வேலைகளில் ஈடுபட்டுள்ளது கொரானா மீதான அச்சத்தை குறைந்துள்ளது எனவும் செய்திகள் வெளிவருகின்றன.
கருத்துக்களேதுமில்லை