காதல் தோல்வியா? அதிலிருந்து எப்படி வெளிய வர்றதுனு தெரியலையா?
எப்பொழுதும் நம்மை ஆட்கொள்ளுகின்ற ஒரு விஷயம் என்றால் அது உணர்வுகள் தான். அதிலும் காதல் உணர்வுகள் என்றால் உணர்ச்சிவசப்படாதவர்கள் என்று யாரும் கிடையாது. தற்போதைய சமூகத்தில் ஒரு காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி தங்களுடைய நிலைமையை சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பது ஒரு பேஷனாகி வருகிறது. இந்த மாதிரியான ரொமான்டிக் போஸ்டர்களும், பிரேக்அப் கவலைகளும் எதற்காக மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று யோசிப்பதே இல்லை. பொதுவாக காதல் ஜோடிகளுக்கு இடையே பிரேக்அப் என்று வரும் போது நிராகரிப்பு, சந்தேகம் போன்ற குணங்கள் வேட்டையாடத் தொடங்கி விடுகின்றன.
காதல் தோல்வி
பிரேக்அப்பிற்கு பிறகு நிறைய காதல் ஜோடிகள் தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. மேலும் அவர்கள் மதிப்பற்றவர்களாகவும் அன்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். காதல் பிரேக்அப் ஏற்பட்ட உடனே வாழ்க்கையே போய் விட்டது என்று மூழ்காதீர்கள். காதல் உணர்வுகள் அழகான ஒன்று தான். ஆனால் அதை உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். இல்லையென்றால் நீங்கள் பிரிவில் இருந்து மீண்டு எழ பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். வருத்தத்திலும், வேதனையிலும் இருப்பதை விடுத்து அதிலிருந்து மீள முயற்சி செய்யலாம். உங்க காதல் பிரேக்அப்பை எப்படி சமாளிக்கலாம், உங்க உணர்வுகளை எப்படி மாற்றலாம் இதோ அதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இது உங்க வேதனையை குறைக்க கை கொடுக்கும்.
புண்படுத்தும் உணர்வுகளை மதிக்காதீர்கள்
உங்களை புண்படுத்தும் எந்த உணர்வுகளையும் மதிக்காதீர்கள். நீங்கள் அதை மதிக்கும் போது அது உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் ஏற்படும் உங்களை தவறான பாதையில் அழைத்துச் செல்லும். எனவே பிரேக்அப் ஏற்பட்ட பிறகு ஏற்படும் கோபத்தை சமாளிக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இதைத் பற்றி பேசுங்கள், முடிந்த வரை எழுதக்கூட செய்யுங்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட காயத்தை நினைத்தே பொலம்பிக் கொண்டு இருப்பது தேவையில்லாதது. அதைப்பற்றி ஒரு போதும் சிந்திக்காதீர்கள்.
குற்றவுணர்வை வளர்த்துக் கொள்ளாதீர்கள்
நமக்கு ஏற்படும் பிரச்சினையில் நம்மை பற்றி குறை கூறுவது மனித இயல்பு. உங்க காதலி உங்களைப் பற்றி தவறாக கூறுகிறார் என்பதற்காக குற்ற உணர்வை வளர்த்துக் கொள்ளாதீர்கள். இது உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கையை குறைத்து விடும். எனவே குற்றவுணர்வை சுமப்பதற்கு பதிலாக இது எப்படி நடந்திருக்கும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.
உங்க முன்னாள் காதலரை குறை கூறாதீர்கள்
காதல் பிரேக்அப் என்றால் இருவருக்கும் பொதுவானது தான். இருவரின் மேலேயும் தப்பு இருக்கலாம். எனவே நீங்கள் உங்க காதலி மீது மட்டும் பழியை சுமத்தாதீர்கள். இது ஒரு மோசமான நிலையை உங்களுக்கு ஏற்படுத்தலாம். எனவே உங்கள் இருவருக்குள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள்.
உங்க உறவை மதிப்பீடு செய்யுங்கள்
உங்களுக்கு பிரேக்அப் ஏற்பட்ட பிறகும் வாழ்க்கை என்பது இருக்கிறது. பிரிந்த பிறகும் ஒருவரின் வாழ்க்கை என்பது நிற்காது. அது ஓடிக்கொண்டு தான் இருக்கும். எனவே நீங்கள் மற்றொரு நபரின் மீது கூட காதல் வயப்படலாம். காதல் வரலாம். ஆனால் இந்த உறவு வலுவாக இருக்க வேண்டும் என்றால் முந்தைய காதல் உறவை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். பிரிந்த காதல் உறவில் இருக்கிற அதே தப்பை நீங்கள் மறுபடியும் செய்யக் கூடாது. எனவே பிரேக்அப் பிறகு உங்க காதல் உறவை மதிப்பீடு செய்து செய்த தவறை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இது அடுத்து வரும் உங்க வாழ்க்கையை மேம்படுத்தும்.
சுய பாதிப்பு வேண்டாம்
பிரேக்அப் உங்களுக்கு தனிமை, கோபம், அழுகை, வெறுப்பு போன்ற பலவித உணர்வுகளை கொடுத்துச் செல்லலாம். நிறைய பேர் இந்த உணர்வுகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தற்கொலை போக்கு, கொலை போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். பிரேக்அப் மட்டுமே வாழ்க்கையின் முடிவல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களை நேசிக்க இன்னும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உறக்கநிலை மனநிலைக்கு செல்ல வேண்டாம்
நிறைய பேர் தங்களுடைய காதல் பிரேக்அப் ஆன பிறகு தனிமையை அனுபவிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் முகத்தில் சிரிப்பு இல்லாமல் இதயம் ரணமான மாதிரி ஆகிவிடும். ஆனால் இந்த நேரத்தில் தான் சிரிப்பு, அன்பு மற்றும் பாராட்டு போன்ற விஷயங்கள் தேவைப்படுகிறது. அதற்கு நீங்கள் தனிமையை தவிர்த்து உங்க நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் கழியுங்கள். இது உங்க மனதை ரிலாக்ஸ் ஆக்கும். வேதனையை குறைக்கும். அவர்கள் உங்களை மதிப்புமிக்கவர்களாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைப்பார்கள். எனவே உங்க காதல் காயத்தை ஆற்ற அவர்களுடன் அதிக நேரம் செலவழியுங்கள்.
எதுவும் செய்ய வேண்டாம்
காதல் பிரேக்அப்பிற்கு பிறகு உங்க இதயத்தை பழைய நிலைக்கு கொண்டு வர விரும்பியதைச் செய்து மகிழுங்கள். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளை செய்யுங்கள். இது உங்க மனதை காயத்திலிருந்து மற்றும் வலியிலிருந்து விலக்கிக் கொள்ள உதவும், மேலும் ஆக்கபூர்வமான ஒன்றைச் செய்ய முயற்சி செய்யுங்கள்.
கருத்துக்களேதுமில்லை