கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 915 மில்லியனாக அதிகரிப்பு
இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் ஐந்து மில்லியன் ரூபாவையும் ரங்கிரி தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கம் ஐந்து மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு. ஏ.எம்.ஏ மானெல் பண்டார ஐம்பதாயிரம் ரூபாவையும், கம்பஹா பிரதேச சபை உறுப்பினர் திரு. மானெல் கருணாவங்ச 16500 ரூபாவையும், திரு. சரத் கருணாரத்ன ஐந்து லட்சம் ரூபாவையும், NEC Lanka Industries நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவையும், திரு. உதார கிங்தொட மற்றும் திரு. மகேஷ் டயஸ் ஆகியோர் ஒரு லட்சம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 915 மில்லியனாக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் கோரிக்கையின் பேரில் திரு. ரஞ்சன் டி சில்வா மற்றும் தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் ரொஷான் வெல்லப்புளி ஆகியோர்களினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவமனை நடவடிக்கைகளுக்காக 03 கைத் தொலைபேசிகள் அதன் பிரதிப் பணிப்பாளர் சந்தன கஜநாயகவிடம் கையளிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை