நல்லாட்சி மோசடியாளர்கள் சகலரும் விரைவில் சிறைக்கு – அரசின் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு
“நல்லாட்சி அரசு என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி செய்து நிதியைச் சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.”- இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நல்லாட்சி அரசின் அமைச்சர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. குற்றவாளிகள் அனைவருக்கும் தக்க தண்டனையை நீதித்துறை வழங்கும்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட நல்லாட்சி அரசில் இடம்பெற்ற சகல மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வார்கள்.
எக்காரணம் கொண்டும் குற்றவாளிகள் தப்பிப்பிழைக்க மாட்டார்கள்.
ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்றியே தீருவோம். இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உறுதியாக இருக்கின்றார்கள்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை