அரசல் புரசலாக கசிந்த பிரபல நடிகர்களின் இரகசிய காதல் கதைகள்.. இல்லவே இல்லை என மறுத்த நடிகர்கள்

நீரின்றி அமையாது உலகு என்பது போல, கிசுகிசுக்கள் இன்றி அமையாது திரையுலகு. திரை பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு மத்தியில் ஓர் இரகசிய காதல், சில ஊடல், கூடல்கள் நடக்கும் என்பது ஊடகங்கள் மிகையாக ஏற்படுத்திய பிம்பங்கள். இதற்கு காரணம் சில உண்மை நிகழ்வுகளும் கூட.

ஆனால், இதுபோன்று வெளிவந்த சில செய்திகள் பிறகு புரளி என்று தெரிய வந்தாலும் கூட காலங்கள் அழிந்தாலும் அழியாது என்பது போல நிலைத்து நிற்கும்.

கமல் – சிம்ரன்

“பம்மல் கே சம்மந்தம்”, “பஞ்ச தந்திரம்” போன்ற திரைப்படங்களின் போது கமலும், சிம்ரனும் காதலிப்பதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்வார்கள் என்றும் கிசுகிசுக்கள் நாளிதழ்களில் பரவின.

விஜய் – சங்கவி

நடிகர் விஜய்யின் ஆரம்ப காலக்கட்ட திரைப்பட பயணத்தின் போது நடிகை சங்கவியுடன் ரசிகன், விஷ்ணு போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளார். அப்போது இவர்களுக்குள்ளும் காதல் பறவை சிறகடித்ததாக புரளிகள் இருந்தன.

விஜய் – த்ரிஷா

கில்லி, திருப்பாச்சி என தொடர்ந்து மெகா ஹிட் படங்கள் கொடுத்த ஜோடி விஜய் – த்ரிஷா. வெற்றிக் கூட்டணியாக ஒரு ஜோடி வளர்ந்தாலே அவர்கள் மத்தியில் அரசல் புரலாக செய்திகள் பரவுவது என்பது இயல்பு. அந்த பட்டியலில் இவர்களும் தப்பவில்லை. இதன் பிறகு இவர்கள் ஆதி, குருவி போன்ற படங்களில் சேர்ந்து நடித்தனர்.

விஷால் – வரலட்சுமி

இன்று வரையிலும் உண்மையா, இரகசியமா, புரளியா என்பது போல உலாவி வருவது விஷால் – வரலட்சுமி காதல் கதை. தற்போது இவர்கள் காதலிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகத் செய்தியாக உள்ளது.

அனுஷ்கா – பிரபாஸ்

அனுஷ்கா – பிரபாஸ் மத்தியில் காதல் ஏற்பட்டு இருவரும் இரகசியமாக காதலித்து வருவதாக ஓரிரு வருடங்கள் முன்பு பரபரப்பாக செய்திகள் பரவின. பிறகு ஊடகங்களே அவர்கள் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்வியையும் எழுப்பியது.

த்ரிஷா – ராணா

த்ரிஷா – ராணா, பல சினிமா விருது நிகழ்சிகளில் கூட அப்பட்டமாக கலாய்க்கப்பட்டது. இருவரும் மெலிசாக புன்னகைத்த போதிலும் இது “அதுக்கு மேல” போகல. பிறகு திருமணம் நிச்சயம் ஆகி டிராப் ஆனது வேறு கதை. ஒருவேளை இதுக் கூட ஓர் காரணமாக இருக்குமோ என்று சந்தேகங்கள் உலாவி வருகின்றன.

சித்தார்த் – சமந்தா

கட்டிக்கிட்டா சமத்து சமந்தாவை தான் என்று சித்தார்த் அடம்பிடித்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. அதற்கு ஏற்ப எங்கு நிகழ்ச்சி என்றாலும் இவர்கள் ஜோடியாகவே உலா வந்தனர். கடைசியில் எப்போதும் போல இதுவும் காற்றோடு காற்றாக கலந்து மறைந்து போனது. சமந்தா திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

இலியானா – அன்ரூவ்

இஞ்சி இடுப்பழகி இலியான ஆஸ்திரேலியா புகைப்பட கலைஞர் ஒருவரை லவ்வியதாக சில கூறப்படுகிறது. இதை பற்றி பெரியதாக செய்திகள் ஊடகங்களில் வராவிட்டாலும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டன. தற்போது பிரிந்து விட்டனர்.

டாப்சி – மாத்தியாஸ்

வெள்ளாவி வெச்சு வெளுத்த பேய் அழகி டாப்சி வெள்ளைக்கார துறையை தான் காதலிக்கிறார் என்ற புரளிகள் உலாவிக் கொண்டிருக்கிறது. இவர் டானிஷ் பேட்மிட்டன் விளையாட்டு வீரரை லவ்வுவதாக செய்திகள் பரவின.

பிரபு – குஷ்பு

திருணமான பிரபுவுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே நாயகி குஷ்பு தான். இவர்களது ஜோடி பொருத்தமும் அட்டகாசமாக இருந்தது. ஒரு சமயத்தில் இவர்கள் நிஜமாகவே திருமணம் செய்துக் கொண்டால் கூட நன்றாக தான் இருக்கும் என்று ரசிகர்களே விரும்பினார்கள்.

அஜித் – ஹீரா

பெரும்பாலும் பலரும் அறியாத கிசுகிசுக்கப்பட்ட ஜோடி இவர்கள். தற்போதைய தல ரசிகர்கள் பலருக்கு கூட இது தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த ஜோடிகளை போல இன்னும் பல ஜோடிகள் புரளியாக காணப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஜெய் – அஞ்சலி

எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததில் இருந்தே இவர்களுக்குள் காதல் என்று வதந்தி இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் இருவரும் அவ்வப்போது ஒன்றாக பொழுதைக் கழித்து வந்தனர். ஆனால் சமீப காலமாக இருவருக்குள்ளும் முட்டிக் கொண்ட செய்தி தெரியவந்துள்ளது.

எஸ் ஜே சூர்யா – பிரியா பவானி சங்கர்

கிட்டதட்ட 50 வயதுக்கு மேலான எஸ் ஜே சூர்யா நடிகை பிரியா பவானி சங்கரிடம் காதலை கூறியதாக வதந்திகள் கிளம்பியது. அதற்கு காரணம் இருவரும் தொடர்ந்து மான்ஸ்டர், பொம்மை போன்ற படங்களில் நடித்து வருவது கூட இருக்கலாம்.

கமல் – பூஜாகுமார்

கமல்ஹாசனுடன் கிசுகிசுக்கபடாத நாயகிகளே இருக்க முடியாது. வயதான பிறகும் கூட தற்போது தன்னுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் என்பவருடன் காதலில் விழுந்ததாக வதந்திகள் பரவி உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.