கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதில்லை – அஜித் ரோஹண
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சாதாரண நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எதிர்வரும் நாட்களில் பல புதிய சட்டங்கள் அடங்கிய சுற்றுநிரூபத்தை வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸினை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தயாரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் விசேட வைத்தியர் அநுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை