இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை – பந்துல
இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “உலக வங்கியின் மூலமாக 126 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அந்த நிதித்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் எமது இருப்பில் இருந்து செலவு செய்கின்றோம். எனினும் இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை.
அதேபோல் சர்வதேச சந்தையில் கனிய எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதால் இலங்கையில் எண்ணெய் விலையை குறைக்க முடியாது. அது குறித்த தீர்மானம் எடுக்கும் திட்டமொன்று உள்ளது.
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தால் அதன் இலாபம் மத்திய வங்கியில் எண்ணெய் குறித்த கணக்குகளில் சேரும். இவ்வாறு நாம் 200 மில்லியன் பெற்றுக்கொள்ள நினைக்கிறோம்.
எனினும் பெற்றோலியக்கூட்டுத்தாபனம் கடனில் உள்ள காரணத்தினால் இந்த நிதியை கடன்களை நிரப்ப பயன்படுத்வோம். எதிர்காலத்தில் இதன் பலன்களை மக்கள் அனுபவிக்க முடியும்.
இவ்வாறான திட்டமே எம்மிடம் உள்ளது. விலை நிர்ணயம் ஒன்றினை உறுதியாக கடைப்பிடக்க வேண்டும். அவ்வாறு கடைப்படித்தால் நெருக்கடிகள் ஏற்படும் வேலைகளிலும் மக்களுக்கு நெருகடியாகளை வழங்காது கையாள முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை