சுயநலமா யோசிச்சா பொழப்பு நாறிடும்.. OTT ரிலீசுக்கு கடுமையாக எச்சரித்த பிரபல தியேட்டர் நிறுவனம்
ஊரடங்கு காரணமாக தற்போது இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தியேட்டர்களை வைத்து நடத்தும் பலரும் OTT போன்ற நெட்வொர்க் தளங்களால் பெரிதும் அழிவை எதிர்த்து கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாக தியேட்டர்காரர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரிய பிரச்சனை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
அதற்குக் காரணம் தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்களை நேரடியாக ஆன்லைன் தங்களுக்கு விற்று காசு பார்ப்பதால் தான். இவ்வளவு நாட்களாக தயாரிப்பாளர்களும் தியேட்டர்காரர்களும் ஒருவரை ஒருவர் நம்பி தான் இந்த தொழிலை செய்துவருகின்றனர். ஆனால் சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் சுயநலமாக யோசிப்பதால் பிற்காலத்தில் தியேட்டர்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரிய படம் ஆன்லைன் வலைதளங்களில் வெளியாகாமல் இருந்தாலும் சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து ஆன்லைன் பிளாட்பாரத்தை நம்பியே படங்களை விற்று வருகின்றனர். அதற்கு தியேட்டர்காரர்களும் ஒரு விதத்தில் காரணம் தான். பெரிய பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிறிய பட்ஜெட் படங்களை நசுக்குவதால் அவர்கள் நேரடியாக OTT தளங்களுக்கு விற்று போட்ட முதலை எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு நேரடியாக ஐநாக்ஸ் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக 600க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களை கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை பல நகரங்களில் நடத்தி வருகிறது ஐநாக்ஸ் நிறுவனம்.
இந்நிறுவனம் சமீபத்தில் ஆன்லைன் பிளாட்பாரங்களில் படங்களை வைக்கும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் தியேட்டர்காரர்களுக்கு தயாரிப்பாளர்கள் துரோகம் செய்வதைச் சுட்டிக்காட்டி எழுதி இருந்ததால் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு காரணம், அமிதாப்பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் குலோபா சிட்டோபா என்ற படத்தை ஆன்லைன் பிளாட்பாரத்தில் விற்றதுதான். பெரிய நடிகரின் படத்திற்கு இப்படி செய்தால் தியேட்டருக்கு மக்கள் வருவது குறைந்துவிடும் என்ற நோக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது ஐநாக்ஸ் நிறுவனம்.
கருத்துக்களேதுமில்லை