ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் கருத்து!

ஒன்றாரியோ மாகாணத்தின் மீட்பு கட்டத்தின் முதல் கட்டம் குறித்து முதல்வர் டக் ஃபோர்ட் விபரித்துள்ளார்.

குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நமது முயற்சிகள் பலனளிக்கின்றன. நாம் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால், நாம் நமது காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நாம் நிறைய வணிகங்களைத் திறந்து, அதிகமானவர்களை மீண்டும் வேலைக்கு அழைத்துச் செல்ல முடியும்’ என கூறினார்.

மே மாதம் 16ஆம் திகதி, கோல்ஃப் மைதானங்கள் மீண்டும் திறக்கப்படலாம். குழாம் இல்லங்கள் (கிளப் ஹவுஸ்கள்) ஒப்பனை அறைகளுக்கு மட்டுமே திறக்கப்படுகின்றன. உணவகங்கள் பொதி செய்து எடுத்து செல்ல மட்டுமே திறக்கப்படுகின்றன.

கூடுதலாக மெரினாக்கள், படகு குழாம்கள் மற்றும் பொதுப் படகு வலித்தல் முதலிய பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. தனியார் பூங்காக்கள் மற்றும் முகாம் மைதானங்கள் பருவத்திற்கான தயாரிப்பை செயறல்படுத்தவும், ட்ரெய்லர்கள் மற்றும் பொழுதுபோக்கு வாகனங்களுக்கான அணுகலை அனுமதிக்கவும், அதன் உரிமையாளர்களுக்கு முழுப் பருவ ஒப்பந்தமும் உள்ளது.

தொழுவங்கள் போன்ற விலங்குச் சவாரி நிறுவனங்கள் தங்கள் விலங்குகளைப் பார்வையிடவோ, பராமரிக்கவோ அல்லது சவாரி செய்யவோ பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.