எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைக்க வேண்டும் – ஜே.வி.பி. கோரிக்கை!

நுகர்வோருக்கு நன்மையளிக்கும் முகமாக எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை ஜனவரி முதல் மே வரை 60 வீதமாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

எனவே 104 ரூபாயாக உள்ள ஒரு லீட்டர் டீசலை 42 ரூபாய்க்கும். ஒரு லீட்டர் பெட்ரோலை 55 ரூபாயாலும் குறைக்க முடியும். ஒரு லீட்டர் மண்ணெண்ணெயை 70 இல் இருந்து 28 ரூபாயாகவும் குறைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 10 அமெரிக்க டொலர்களுக்கு வாங்க முடியும் என்றும் அதே நேரத்தில் திறந்த சந்தையில் 28 டொலர்களுக்கு மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை மின்சார உற்பத்தியில் பெரும்பாலானவை எரிபொருளைச் சார்ந்து இருப்பதால் எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப மின்சாரக் கட்டணங்களையும் குறைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.